பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாள் செயல்வாதம் நவம்பர் 25 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10 ஆம் திகதி வரை உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது . நீதிக்கும் , சமாதானத்துக்கும் , வன்முறைகளற்ற வாழ்தலுக்குமான தெற்காசியாப் பெண்களின் இணைந்த செயல்வாதத்தையும் , நட்பையும் வலுப்படுத்தும் வகையில் ‘ சங்கத் ’ பெண்நிலைவாத வலையமைப்பினால் கார்த்திகை 30 ஆம் திகதி தெற்காசியப் பெண்கள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது . இந்த செயல்வாதத்தின் ஒரு பகுதியாக நிறணி நண்பிகளாலும் , சமதை பெண்நிலைவாதிகளாலும் ஓவியத்தில் ஆர்வமுள்ள இளையோருடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டன . இதில் இளம் பெண்களும் , ஆண்களும் கலந்து கொண்டனர் . இந்த சுவரொட்டிகளைக் கொண்ட இணையவழிக் கண்காட்சி தெற்காசியப் பெண்கள் தின செயல்வாதமாகவும் , நூறு கோடி மக்களின் எழுச்சி – 2026 இன் ஆரம்ப நிகழ்ச்சியாகவும் இங்கு வெளியிடப்படுகின்றன . The 16 Days of Activism against Gender-Ba...
- Get link
- X
- Other Apps